காற்றில் பறக்கிறதா கரோனா கட்டுப்பாடுகள்?

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதமாக செயல்படுத்தி, அதிகளவில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்து வருகிறது.
காற்றில் பறக்கிறதா கரோனா கட்டுப்பாடுகள்?
காற்றில் பறக்கிறதா கரோனா கட்டுப்பாடுகள்?


சென்னை: தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதமாக செயல்படுத்தி, அதிகளவில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்து வருகிறது.

ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் யாருமே முறையாகப் பின்பற்றுவதில்லை. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற எதையும் பலரும் பின்பற்றுவதில்லை என்கிறது உண்மை நிலவரம்.

உதாரணமாக சில பகுதிகளைப் பார்க்கலாம்.. கள்ளக்குறிச்சியில், அரசுப் பேருந்தில் பயணிக்கும் பலரும் முகக்கவசம் அணியாமல்தான் உள்ளனர். பேருந்து முழுக்க பயணிகளால் நிரம்பியிருக்க, பொதுவெளியில் பலரும் முகக்கவசம் அணியாமல் பயணிப்பதைக் காண முடிகிறது.

கரோனா அச்சத்தால் முகக்கவசம் அணிந்து கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கும் ஆபத்து நேரிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதே நிலைதான் காணப்படுகிறது. பேருந்தில் பயணிக்கும் பலரும் முகக்கவசம் அணிவதில்லை. முன்பெல்லாம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு டிக்கெட்டே கொடுப்பதில்லை. ஆனால் அந்த கெடுபிடிகள் தற்போது இல்லை. இதனால் மக்களும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் மெத்தனம் காட்டுகிறார்கள் என்கிறார் வியாபாரி ஒருவர்.

முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளைப் பிடிக்கும் போக்குவரத்துக் காவலர்கள், பேருந்தில் செல்வோரை கண்டுகொள்வதில்லை. 

ஆனால், சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு மக்கள் கரோனா கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுகிறார்கள்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில், மக்கள் முறையாக கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பது கவலையளிக்கிறது. கரோனா மூன்றாம் அலை உருவாகாமல் தடுப்பதில் அரசு மற்றும் மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என்றார்.

தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பேசுகையில், கரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரோனா பேரிடரை முடிவுக்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து வருகிறது. அதற்கு மாநில மக்களின் முழு ஒத்துழைப்புத் தேவை. இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com