சங்ககிரியில் அதிகளவாக 87 மி.மீட்டர் மழை 

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சங்ககிரியில் 87 மில்லி மீட்டர் மழையும்,  தேவூர் வருவாய் உள்கோட்டத்திற்குள்பட்ட  பகுதிகளில்  51.40 மில்லி மீட்டர்  மழையும்  பெய்
தேவூர் சுற்று வட்டார பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையால்  காவேரிப்பட்டி மோட்டூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் மழை நீர்.
தேவூர் சுற்று வட்டார பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையால் காவேரிப்பட்டி மோட்டூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் மழை நீர்.

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு சங்ககிரியில் 87 மில்லி மீட்டர் மழையும்,  தேவூர் வருவாய் உள்கோட்டத்திற்குள்பட்ட  பகுதிகளில்  51.40 மில்லி மீட்டர்  மழையும்  பெய்தது. 

சங்ககிரி நகர், வடுகப்பட்டி, ஆவரங்கம்பாளையம், ஓலக்கசின்னானூர், தேவூர், காவேரிப்பட்டி, கோனேரிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  வியாழக்கிழமை  பகலில் வெப்பம் அதிகரித்தது. அதனையடுத்து இரவு முழுவதும் கன மழை பெய்தது.  

இதையும் படிக்க | 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சங்ககிரியில் நிகழாண்டு மே மாதம் 24 ஆம் தேதி 47 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனையடுத்து செப்டம்பர் 23 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 87 மில்லி மீட்டர் மழை அதிகளவாக பெய்தது. இதே போல் தேவூரில் 51.40 மில்லி மீட்டர் மழையும் மொத்தம் சங்ககிரி வட்டத்தில் 138.40 மில்லி மீட்டர் மழை பெய்தது.  இரவு பெய்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com