‘பருவமழை காலத்தில் பாதிப்பை தடுக்க வேண்டும்’: முதல்வர் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும் என அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும் என அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசியது:

“பருவமழை காலங்களில் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் அரசு துறைகளும் தனித்தனியே இயங்காமல், ஒன்றாக இணைந்து மக்கள் துயரை நீக்க செயல்பட வேண்டும்.

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மாநில துறைகள் மட்டுமின்றி ராணுவம், கப்பற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவையுடன் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் புயல், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை கண்டறிந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறையுடன் பிற துறைகள் இணைந்து முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலம் மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைகளை இலவச தொலைபேசி எண்ணான 1070, 1077 மூலம் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பருவமழை பாதிப்பில் சிக்கும் மக்களை மீட்டு தங்க வைக்க கூடிய நிவாரண முகாம்களை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அங்கு தங்க வைக்கக்கூடிய மக்களுக்கு குடிநீர், உணவு, குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவை திட்டமிட்ட வேண்டும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com