மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழகத்தில் இன்று மேலும் 1,724 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் இன்று மேலும் 1,724 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 2:03 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 1,724 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 4.62 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 26,53,848 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 198 பேரும், சென்னையில் 194 பேரும், ஈரோட்டில் 121 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 1,635 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26.02 லட்சத்தைக் கடந்துள்ளது. 
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17,263-ஆக உள்ளது. மற்றொரு புறம் கரோனாவுக்குள்ளாகி மேலும் 22 போ் உயிரிழந்ததால், இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,476-ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.