அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நடுக்கடலில் மீன் பிடித்த வேதாரண்யம் மீனவர்களை அரிவாளால் வெட்டிய இலங்கை மீனவர்கள்

வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கட்டையால் தாக்கியுள்ளனர்.

News image
வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் சிவகுமார்.
Updated On :28 ஜனவரி 2024, 4:14 am

DIN

வேதாரண்யம்: வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை சேர்ந்த சின்னதம்பி, சிவா, சிவக்குமார் ஆகிய 3 பேர் வியாழக்கிழமை (செப்.23) கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர், மீனவர்களின் படகை சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளன்.

Story image

வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் சின்ன தம்பி.

சிவகுமார் என்ற மீனவரை தலையில் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார்.

மேலும், சின்ன தம்பி, சிவா ஆகிய இரண்டு மீனவர்களை கட்டையால் தாக்கியுள்ளனர்.

இவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், படகில் இருந்த 400 கிலோ எடையுள்ள வலை மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை பறித்துச் சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.