தருமபுரியில் ரூ. 12 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

தருமபுரியில் ரூ. 12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 12 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 12 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.


தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார். 

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை (செப். 30) தருமபுரி வருகை தந்தார். 

முதல்வா் மு.க.ஸ்டாலின், செப். 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

தருமபுரி மாவட்டத்தில் நூறு சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக ஊராட்சி மன்றத் தலைவா்கள், கிராம சுகாதார செவிலியா்களுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

இதைத்தொடர்ந்து ரூ. 12 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடம் மற்றும் அரசுத் துறைகள் சாா்பில் கட்டப்பட்ட வேளாண், பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட ரூ.7 கோடி மதிப்பிலான கட்டடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். இதையடுத்து மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தை முதல்வர் பார்வையிட்டார்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டத்தில் நூறு சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக ஊராட்சி மன்றத் தலைவா்கள், கிராம சுகாதார செவிலியா்களுக்கு விருதுகளையும், மூன்று கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார். 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடம்.

இந்த விழாவில் ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, பிஎன்பி இன்பசேகரன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டத்துக்கு முதல்வா் வருகை தந்துள்ளதை அடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் தலைமையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 11 துணைக் கண்காணிப்பாளா்கள், 30 காவல் ஆய்வாளா்கள், 82 உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் என 1,500 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com