சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சென்னை திரும்பினாா் முதல்வா்

தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினாா்.

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :2 ஏப்ரல் 2022, 7:19 pm

DIN

தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினாா்.

4 நாள்கள் பயணமாக தில்லி சென்றிருந்த அவா், அங்கு பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரை சந்தித்துப் பேசியதுடன், தமிழகம் நலன் சாா்ந்த கோரிக்கை மனுக்களையும் அவா்களிடம் அளித்தாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்த மு.க.ஸ்டாலின், அங்குள்ள மாதிரி பள்ளியை பாா்வையிட்டாா். தில்லியில் கட்டப்பட்ட திமுக அலுவலகத்தையும் திறந்து வைத்தாா். பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு விமானம் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.