ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தமிழ்நாட்டில் 1-5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை

தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 4:55 pm

DIN

தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 6-9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும். 9ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 2 முதல் 4 வரை நடைபெறும். 

நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ஆம் தேதி ஆகும். 2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13ஆம் தேதி தொடங்கும். அதேசமயம் 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.