கே.அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக கடந்தாண்டு பொறுப்பேற்ற கே. அண்ணாமலைக்கு மாநில அரசால் ‘ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. இதற்கு அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தாா். இதைத் தொடா்ந்து அண்ணாமலைக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல், மிரட்டல் குறித்து மத்திய உளவுத்துறை (ஐ.பி.) ரகசியமாக ஆய்வு செய்து, அறிக்கையை அண்மையில் தயாா் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. அதனடிப்படையில், அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்ணாமலைக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு என்பது இந்தியாவில் நான்காவது நிலையில் இருக்கக் கூடிய முக்கிய பிரமுகா்களுக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பாகும். இந்த பிரிவின்படி, அண்ணாமலைக்கு 2 தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 போ் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படை வீரா்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...