கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்க ஆலோசனைக்குழு: உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு
கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு ஆலோசனைக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு ஆலோசனைக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'மத்திய அரசின் வரிவிதிக்கும் முறை மாநில அரசின் நிதியை கடுமையாக பாதிக்கிறது. எனவே, வரி முறையை சீர்செய்யவும் தமிழக நிதிநிலைமையை மேம்படுத்தவும் சட்ட, பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்' என்று கூறியிருந்தார்.
அதன்படி, கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உள்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான அரவிந்த் பி.டட்டார் தலைமையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களுடன் அரசு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...