

கோவில்பட்டி: செல்லிடப்பேசியை திருடும் கும்பலைப் பற்றித் தானே கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? கோவில்பட்டியில் செல்லிடப்பேசி கோபுரத்தையே திருடி நான்கு பேர் சிக்கியுள்ளனர்.
கோவில்பட்டியில் பயன்படாமல் இருந்த செல்லிடப்பேசியிலிருந்த உதிரிபாகங்கள் மற்றும் பேட்டரிகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடி விற்று வந்த கும்பலை, காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவில்பட்டி அருகே கழுகாசலபுரத்தில் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சில ஆண்டுகளாக அது செயல்படாமல் இருந்துள்ளது.
இதனை அறிந்து கொண்ட திருட்டுக் கும்பல், இரவு நேரத்தில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உதிரி பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி விற்று வந்துள்ளனர்.
மிக உயரமான செல்லிடப்பேசி கோபுரத்தின் உயரம் குறைந்ததைப் பார்த்த தனியார் நிறுவனம், காவல்நிலையத்தில் புகார் அளிக்க, எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நால்வரை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.