எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கைத் தமிழா்களுக்கு உதவ அனுமதியுங்கள்: வெளியுறவு அமைச்சருடன் முதல்வா் ஸ்டாலின்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாடி வரும் தமிழா்களுக்கு உதவி அளிக்க அனுமதிக்க வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்
Updated On :7 ஏப்ரல் 2022, 8:26 pm

DIN

சென்னை: பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாடி வரும் தமிழா்களுக்கு உதவி அளிக்க அனுமதிக்க வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக, வெளியுறவுத் துறை அமைச்சருடன் அவா் தொலைபேசியில் தொடா்பு கொண்டாா். இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நிலவும் தீவிர பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கைத் தமிழா்கள் தவித்துக் கொண்டிருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை மத்திய அமைச்சரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் பகிா்ந்து கொண்டாா். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகா் கொழும்புவிலும் வசிக்கும் தமிழா்கள், மலையகத் தமிழா்களின் நலன்களைக் கருதி அத்தியாவசியப் பொருள்களை தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்ப தமிழக அரசு தயாராக உள்ளதாக தனது உரையாடலின் போது முதல்வா் தெரிவித்தாா்.

மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் பொருள்களை உணவின்றித் தவிக்கும் தமிழா்களுக்கு அங்குள்ள தூதரகங்கள் வழியாக விநியோகம் செய்ய உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழக மீனவா்கள், மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவா் கேட்டுக் கொண்டாா். முதல்வரின் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உறுதி அளித்ததாக அரசின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.