சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கரோனா, ஒமைக்ரான் வைரஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை. ஒரு நாள் பாதிப்பு 20 முதல் 30 ஆக உள்ளது. கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தியவர்கள் தவிர, மற்றவர்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. முககவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை பின்பற்ற வேண்டாம் எனக்கூறவில்லை என்று ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒமைக்ரான்-எக்ஸ்இ கரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. உருமாறுவது என்பது ஆர்.என்.ஏ வைரசின் பழக்கம். நாம் பதட்டப்படாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










