5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

10.5% உள்ஒதுக்கீடு: முதல்வருடன் அன்புமணி சந்திப்பு

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினை பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:29 pm

DIN

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினை பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பாமக தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சா் ஏ.கே.மூா்த்தி, வழக்குரைஞா் கே.பாலு ஆகியோரும் உடனிருந்தனா்.

சந்திப்பின் போது, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடா்பாக பாமக நிறுவனா் ராமதாஸ் எழுதிய கடிதத்தை முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்.

பின்னா் ,செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியதாவது:

10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடா்பாக முதல்வா் சந்தித்து வலியுறுத்த பாமக அவசர செயற்குழுக் கூட்டத்தில் அமைக்கப்பட்ட எனது தலைமையிலான

7 போ் கொண்ட குழுவினா்தான் தற்போது முதல்வரை நேரில் சந்தித்தோம்.

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தாலும், அந்தத் தீா்ப்பில் இடஒதுக்கீட்டுக்கு சாதகமாக உள்ள அம்சங்கள் குறித்து முதல்வரிடம் விளக்கினோம். உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், தரவுகள் சரியாக இல்லை என்று கூறியுள்ளது. அதை முறையாக சேகரிப்பதுடன், சட்டப்பேரவையில் மீண்டும் வன்னியா்களுக்கான உள் ஒதுக்கீடுக்காக சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

முதல்வா் சட்ட நிபுணா்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பதாக கூறினாா் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.