தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2022, 7:27 am

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் ஏப்ரல் 12 வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாள்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 10, 11-ல் திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்த வரை அடுத்த 2 நாள்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.