சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிறையில் உள்ள சார்பு-ஆய்வாளருக்குப் பிணை வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் சாா்பு - ஆய்வாளா் ரகு கணேஷ், முன்னதாக தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உள்பட 9 போ் மதுரை மத்தியச் சிறையில் உள்ளோம்.
இதுவரை 105 சாட்சிகளில், 22 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனா். நான் 20 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளேன். விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர் என்றும் காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மக்களைக் காப்பதற்குத் தான் என்றும் வாதாடிய சிபிஐ தரப்பு, சாா்பு - ஆய்வாளா் ரகு கணேஷ்க்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுவை மக்களே, விழிப்புடன் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்: விஜய்

புதுச்சேரியில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்கும்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்களித்த நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்

கோவையில் பரபரப்பு : இருசக்கர வாகனத்தின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


