கம்பம்: கேரள மாநிலம் பாலக்காட்டில் செட்டி மகாசபை மாவட்ட மாநாடு, மற்றும் பேரணி நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார், தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஏ.ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அங்குள்ள தனியார் கல்லூரி மைதானத்திலகருந்து பாலக்காடு நகர முக்கிய வீதிகள் வழியாக நூற்றுக்கணக்கான ஆண், பெண் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை
பின்னர் அங்குள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஏ.ஜெகநாத் மிஸ்ரா பேசியதாவது, கேரள மாநிலத்தில் வாழ்கின்ற செட்டியார் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கேரள அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்மூலம் கல்வியிலும் பொருளாதாரத்தில் சமூகம் மேம்பாடு அடையும். தமிழக மக்களும் கேரள மக்களும் ஒற்றுமை உணர்வோடு சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகின்றோம்.
அந்த நட்பு நீடிக்க வேண்டும். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் கவன ஈர்ப்பு மாநாடு தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் மூன்று லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாநில மாநாடு விரைவில் நடத்தப்படும், இவ்வாறு பேசினார்.
மாநாட்டில் கேரள மாநில செட்டி மகாசபை மாநில தலைவர் சசிதரன், துணைத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் நாராயணன், தேசிய செட்டியார்கள் பேரவை தலைமை நிலைய செயலாளர் ரகுபதி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


