வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அடுத்த மூன்று மணி நேரத்தில் மழையா? அதுவும் 25 மாவட்டங்களிலா?

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News image
அடுத்த மூன்று மணி நேரத்தில் மழையா? அதுவும் 25 மாவட்டங்களிலா?
Updated On :13 ஏப்ரல் 2022, 11:26 am

DIN

சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத வகையில் வெயில் கொளுத்திவரும் நிலையில், நாள்தோறும் மழை தொடர்பான செய்திகளும் வந்து, சென்னை வாழ் மக்களின் மனங்களை நோகடித்த வண்ணம்தான் உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்துக்குள் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.