தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் 4 கட்சிகள்

தமிழக ஆளுநர் இன்று அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக நான்கு முக்கிய கட்சிகள் அறிவித்துள்ளன.
ஆர்.என். ரவி (கோப்புப் படம்)
ஆர்.என். ரவி (கோப்புப் படம்)

தமிழக ஆளுநர் இன்று அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக நான்கு முக்கிய கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழ் புத்தாண்டையொட்டி இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், தமிழக மக்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும், நீட் உள்ளிட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும் கூறி இந்த விருந்தை புறக்கணிப்பதாக முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரின் விருந்தில் பங்கேற்க போவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளன.

மேலும், இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைபாட்டை பின்பற்றவுள்ளதாக காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com