சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 5:13 am

DIN

தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதில், தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மேகாலயா மாநில சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்ற துயரச் செய்திகேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களுடைய கார், ரிபோயி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. 

இந்த சம்பத்தில் தமிழக வீரர் விஷ்வா தீனதயாளன் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த மேலும் 3 வீர‌ர்கள் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2022 ஜனவரியில் தேசிய தரவரிசை போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பட்டத்தை வென்றவர் தீனதயாளன். அவரது மறைவுக்கு மேகாலயா முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.