இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கோடை வெப்பம்: இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை?

கோடை வெப்பம் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 ஏப்ரல் 2022, 7:01 am

DIN

கோடை வெப்பம் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் மூடப்பட்ட பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக திறக்கப்பட்டு தற்போது முழுவீச்சில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோடைகால வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகின்றன. பல மாவட்டங்களின் வெப்பத்தின் அளவு சதத்தை பதிவு செய்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.