வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னை, ஒசூரில் புதிய விமான நிலையங்கள்: தொழில்துறை மானியக் கோரிக்கை

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைக்க தேர்வான 4 இடங்களை ஆய்வு செய்து, விமான நிலைய ஆணையம் சாத்தியகூறு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தொழில்துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
சென்னை, ஒசூரில் புதிய விமான நிலையங்கள்: தொழில்துறை மானியக் கோரிக்கை
Updated On :19 ஏப்ரல் 2022, 12:36 pm

DIN

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைக்க தேர்வான 4 இடங்களை ஆய்வு செய்து, விமான நிலைய ஆணையம் சாத்தியகூறு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தொழில்துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், 
சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்
அதிகரித்து வரும் விமான பயணிகள் போக்குவரத்தை கையாளுவதற்காக, புதிய விமான நிலையம் அமைக்கும் பொருட்டு, டிட்கோ நிறவனம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையமும் இணைந்து தற்போதைய வசதிகளை விரிவுபடுத்தவதன் மூலம், சென்னை விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், விமானப் போக்குவரத்தில் எதிர்கால தேவையென மதிப்பிட்டுள்ளதை எதிர்கொள்ள, சென்னை அருகே ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையத்தை நிறுவ மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு இடங்களை டிட்கோ தேர்வு செய்து, சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்தை கேட்டுக் கொண்டது.

இந்த இடங்களை, இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு பார்வையிட்டு, அதன் சாத்தியகூறு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, தமிழகத்தின் வடமேற்கு பகுதியில், புதிய விமான நிலையத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் பகுதி தொழிற்சாலைகளுக்கான மையமாக இருப்பதால், ஒசூரில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு இப்பகுதியை சுற்றியுள்ள விமான போக்குவரத்து மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் உள்ளிட்ட சாத்தியகூறு உள்ள இடங்களை ஆய்வு செய்ய டிட்கோவை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான பணிகளை டிட்கோ ஈடுபட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.