இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லி பயணம்

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரிக்கை வலுத்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று தில்லி செல்கிறார்.

News image
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
Updated On :1 பிப்ரவரி 2024, 9:01 am

DIN

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரிக்கை வலுத்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று தில்லி செல்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்தது. தொடர்ந்து சட்டப்பேரவையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் ஆளுநரின் வாகனம் சென்ற வழியில், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தில்லிக்கு இரண்டு நாள்கள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.