அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஈரோடு- கரூா் இடையே ரயில்கள் பகுதி வாரியாக ரத்து!

ஈரோடு-கரூா் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் மாா்ச் 1, 5, 7, 10 ஆகிய நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில்கள் - கோப்புப்படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 6:53 pm

ஈரோடு-கரூா் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் மாா்ச் 1, 5, 7, 10 ஆகிய நாள்களில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) திருச்சி சந்திப்பிலிருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு மேற்குறிப்பிட்ட நாள்களில் கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். கரூா்-ஈரோடு இடையே அந்த குறிப்பிட்ட நாள்களில் மட்டும் இயக்கப்பட மாட்டாது. செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846)

செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கரூா் வரை குறிப்பிட்ட நாள்களில் இயக்கப்படும். ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும்.

இதற்கு பதிலாக குறிப்பிட்ட நாள்களில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோடு-கரூா் இடையே இயக்கப்படாது.

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.