சங்ககிரியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் 

விவசாய நிலங்கள் வழியாக உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன்நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வருவாய்கோட்டாட்சியர் கோ.வேடியப்பன்.
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வருவாய்கோட்டாட்சியர் கோ.வேடியப்பன்.

சங்ககிரி: சேலம் மாவட்டம்,  சங்ககிரி வட்டம், தேவூர் துணைமின் நிலையத்திலிருந்து எடப்பாடி வட்டம் குருமபட்டி துணைமின் நிலையம் வரை விவசாய நிலங்கள் வழியாக உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன்நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சங்ககிரி வட்டச் செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். 

விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட  துணைத்தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள்,  சேலம் மாவட்டச் செயலர் ஏ.ராமமூர்த்தி மற்றும் விவாசயிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

உயர்மின்னழுத்த கோபுரங்களை சரபங்கா நதிக்கரையோரம் கேபிள் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர்.

தேவூரிலிருந்து குருமபட்டி வரை செல்லும் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் சரபங்கா நதிக்கரையோரம் கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும், விவசாய நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள முன்நுழைவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும், முன்நுழைவு அனுமதியை ரத்து செய்யும் வரை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட சங்ககிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு நுழைய முற்பட்டனர். 

அப்போது சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி.ஆரோக்கியராஜ் தலைமையில் போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். பின்னர் விவாசயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன் விவசாயிகளிடம் கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறு கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com