ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

துணைவேந்தர் நியமன மசோதா: பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

News image
துணைவேந்தர் நியமன மசோதா: பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
Updated On :25 ஏப்ரல் 2022, 11:03 am

DIN

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி வகுக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த சட்ட மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

 துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, விவாதம் நடைபெற்று வருகிறது.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசின் ஆணையின் மூலம் தேர்வு செய்யும் வகையில், இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் உள்ளது போல் தமிழகத்திலும், மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமித்துக் கொள்ள வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். 

அப்போது அவர் கூறுகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்கவேண்டும். மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது. 

துணைவேந்தர் நியமன சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

துணைவேந்தர் நியமன மசோதா மீது பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சியினரும் ஆதரவு தெரிவித்து உரையாற்றி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.