ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

துணைவேந்தர் நியமன மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் மாளிகையில் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.

News image
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
Updated On :27 ஏப்ரல் 2022, 2:23 am

DIN

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் மாளிகையில் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசின் ஆணையின் மூலம் தேர்வு செய்யும் வகையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை சட்ட மசோதா தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது அனைத்து கட்சியினரும் காரசார விவாதம் நடத்திய நிலையில் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவை ஆளுநர் மாளிகையில் தமிழக சட்டத்துறை நேற்று மாலை ஒப்படைத்துள்ளனர்.

ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்ட நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.