
தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள், பணியாற்றுவோரின் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்று வணிக வரித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
வரி ஏய்ப்பைத் தடுக்க உதவுவோருக்கு வெகுமதி, ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்க தட்கல் முறை என பொதுமக்கள் பயனடையும் பல அதிரடி அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
பேரவையில் இன்று வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்த முக்கிய அறிவிப்புகளில், இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அலுவலகங்களில் பணியாற்றும் மக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும்.
அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் தாங்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாளன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமைகளிலும் பதிவுப் பணி மேற்கொள்ளப்படும். இதற்கு கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித்துறையில் 'எனது விலைப்பட்டியல் - எனது உரிமை' என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் மக்கள் தங்களது விலைப்பட்டியலின் ஒளிநகல்களை இணையத்தில் பதவு செய்து குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.