நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி அருள்மிகு உத்திராபதீஸ்வர சுவாமி திருக்கோயில் சப்பர வீதியுலாவில், சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடியில் உள்ள உத்திராபதிஸ்வரர் கோயிலின் சித்திரைப் பெருவிழா நிகழ்வாக வெள்ளிக்கிழமை இரவு (தெருவடைச்சான்) சப்பரம் வீதியுலா நடைபெற்றது.
இந்தச் சப்பரம் தெற்கு வீதியில் திரும்பும்போது, சப்பரத்தின் சக்கரத்துக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தீபராஜன் என்பவர் மீது, சப்பரத்தின் சக்கரம் ஏறியது. இதில் பலத்தக் காயமடைந்த தீபராஜன், சிகிச்சைக்காக நாகைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

உயிரிழந்த தீபராஜன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினர் பல காலமாக தேருக்கு முட்டுக்கட்டைப் போடும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

