திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

சாதிக்காக மாணவர் கொலையா? தேமுதிக விஜயகாந்த் கண்டனம்

சாதி கயிறு அணிவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News image
சாதிக்காக மாணவர் கொலையா? தேமுதிக விஜயகாந்த் கண்டனம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:07 am

DIN

சாதி கயிறு அணிவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அம்பாசமுத்திரம் அருகே பொதுக்குடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தங்களது கையில் சாதியை குறிப்பிடும் வகையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 25 -ஆம் தேதி இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.

இதில், பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிளஸ் 2 மாணவர் செல்வ சூர்யா (17) காயம் அடைந்து சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி செல்வ சூர்யா உயிரிழந்தார். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பள்ளி மாணவர்களிடையே சாதி பாகுபாடு உள்ளது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. சாதிக்காக மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது. மேலும் பள்ளி பருவத்திலேயே சக மாணவர்களால் மாணவன் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும்கூட" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.