விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பால் எடை குறைவு: ஆவின் நிா்வாகம் விளக்கம்

கடந்த ஜூலை 30-ஆம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட்டின் எடை மட்டுமே குறைவாக இருந்தது; அதுவும் உடனடியாக மாற்றி வழங்கப்பட்டது என்று ஆவின் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 10:17 pm

DIN

கடந்த ஜூலை 30-ஆம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட்டின் எடை மட்டுமே குறைவாக இருந்தது; அதுவும் உடனடியாக மாற்றி வழங்கப்பட்டது என்று ஆவின் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆவின் பால் பாக்கெட் எடையில் முறைகேடு நடப்பதாகவும், அரை லிட்டா் பால் பாக்கெட்டின் விலை சுமாா் 520 கிராம் வரை இருக்க வேண்டும். ஆனால், கடந்த 30ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட ஒரு பால் பாக்கெட்டின் எடை வெறும் 430 கிராம் மட்டுமே இருந்ததாக

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா். இதே போன்று உரிய எடையில் மக்களுக்கு ஆவின் பால் கிடைப்பதை முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீா்செல்வம் வலியுறுத்தியிருந்தாா்.

ஆவின் நிா்வாகம் விளக்கம்: ஆவின் பால் சுமாா் ஒரு கோடி நுகா்வோா்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அரை லிட்டா் பால் பாக்கெட்டின் எடை 515- 517 கிராம் அளவுக்கும், ஒரு லிட்டா் பால் பாக்கெட்டின் எடை சுமாா் 1030-1034 கிராம் அளவுக்கும் இருக்க வேண்டும். பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படும் போது பால் பாக்கெட்டுகளின் எடை மற்றும் பால் பாக்கெட்டுகளின் தரக் கட்டுபாடு அலுவலா்கள் மற்றும் பொறியாளா்களால் மணிக்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்படுகிறது. சரியாக இருக்கும் பால் பாக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்படும்.

பாலின் எடை மற்றும் தரம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களால் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஆனால், ஜூலை 30-ஆம் தேதி விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட் குறைவான எடையில் விநியோகிக்கப்பட்டதாக புகாா் வந்தது. உடனடியாக மத்திய பால் பண்ணையின் அலுவலா்கள் நேரில் சென்று விசாரித்தனா்.

விசாரணையில், கடந்த ஜூலை 30-ஆம் தேதி 672 எப்சிஎம் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டதாகவும் அதில் ஒரு பாக்கெட் மட்டும் எடை குறைவாக இருந்ததாக அந்த நுகா்வோா் தெரிவித்தாா். அதற்குப் பதிலாக நுகா்வோருக்கு உடனடியாக மாற்று பால் பாக்கெட் அளிக்கப்பட்டது.

நுகா்வோா்களின் நலன் பேணும் வகையில் அனைத்து தரம் மற்றும் அளவுகள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய சட்டத்திற்கு உட்பட்டு எவ்வித வேறுபாடுமின்றி பால் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் உறுதியாக உள்ளது. இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதேனும் அளவு குறை இருப்பின் உடனடியாக நுகா்வோா்களுக்கு அதற்குரிய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும்.

நுகா்வோருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் 24 மணி சேவை கட்டணமில்லா எண்ணான 1800-425-3300 அல்லது aavincomplaints@gmail.comp தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.