சேலம்: மருத்துவர் இல்லாததால் முதியவருக்கு நடந்த சோகம்!

ஆத்தூர் அரசு தலைமை  மருத்துவமனையில் எறும்பு முறிவு மருத்துவர் இல்லாததால் பாதிக்கப்பட்ட  முதியவரை சரக்கு ஆட்டோவில் ஏற்றிச்சென்ற அவலம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்: மருத்துவர் இல்லாததால் முதியவருக்கு நடந்த சோகம்!
Published on
Updated on
1 min read

ஆத்தூர் அரசு தலைமை  மருத்துவமனையில் எறும்பு முறிவு மருத்துவர் இல்லாததால் பாதிக்கப்பட்ட  முதியவரை சரக்கு ஆட்டோவில் ஏற்றிச்சென்ற அவலம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருப்பையா வயது 57 இவர் விபத்தின் காரணமாக கால் முறிவு ஏற்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அழைத்து வரப்பட்டார்.

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் அலட்சியமாக தெரிவித்ததின் பேரில் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவதிப்பட்டு பின்னர் சரக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து வந்து அதில் முதியவர் கருப்பண்ணனை ஏற்றி  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

ஆத்தூர் அரசு தலைமை  மருத்துவமனையில் எழும்பு முறிவு சிகிச்சைக்காக வந்தவர் சிகிச்சை அளிக்கப்படாமல் சரக்கு ஆட்டோவில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் மேலும் இந்த அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் செவிலியர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அலட்சியப்போக்கு நடந்து கொண்டு செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவும் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com