பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்களுக்கு புதிய கட்டமைப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் செஞ்சி உள்ளிட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்களில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி,

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 9:14 pm

DIN

தமிழகத்தில் செஞ்சி உள்ளிட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்களில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகள் வசூலித்தல், வாகன தணிக்கை போன்ற பணிகளை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த சேவைகளை பொது மக்கள் சிரமம் இல்லாமல் எளிதாகப் பெற்றிட மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்களுடன், பகுதி அலுவலகங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி அலுவலகங்கள் ஓட்டுநா் தோ்வுதள வசதிகளைக் கொண்டு புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம், மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள சீா்காழி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் ஆகியவற்றுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டாா் வாகன ஆய்வாளா் அறை, பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

புதிய அலுவலகங்கள் திறப்பு நிகழ்வில், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, போக்குவரத்து ஆணையாளா் இல.நிா்மல்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.