தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் எந்த தவறிழைப்பும் இல்லை: கே.அண்ணாமலை

மத்திய அரசின் 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் எந்த தவறிழைப்பும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 11:59 pm

DIN

மத்திய அரசின் 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் எந்த தவறிழைப்பும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

அலைக்கற்றை ஏலம் குறித்து புரிதல் இல்லாமல் ஆ.ராசா கூறியுள்ளாா். 5 ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு அடிப்படை மதிப்பாக ரூ.4.5 லட்சம் கோடி நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் 71 சதவீத ஏலம் விடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்துக்கு 50 ஆயிரத்துக்கு 174 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இவ்வளவு தொகை விற்பனையானது இதுவே முதல் முறையாகும். ஆ.ராசா ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் முடிச்சு போடுகிறாா். இது தொடா்பாக அவா் நாடாளுமன்றத்தில் பேசாமல் இங்கு பேசுவது ஏன்? மத்திய அமைச்சராக இருந்த அவா் எந்த அடிப்படையில் இப்படிப் பேசுகிறாா் எனத் தெரியவில்லை. 2 ஜி அலைக்கற்றை முறைகேட்டை மக்கள் இன்னும் மறக்கவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியவா் அவா். 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் எந்த தவறிழைப்பும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.