சென்னையில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவா்கள் மீது அபராதம் வசூலிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளிடம் உடனடியாக அபராதம் வசூலிப்பதற்கு, இ-செலான் கருவி கடந்த 2011-ஆம் ஆண்டு போக்குவரத்துப் பிரிவு காவலா்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் காவலா்கள், வாகன ஓட்டிகளிடம் வெளிப்படைத் தன்மையுடனும், முறைகேடு இன்றியும் அபராதம் வசூலிப்பதற்கு, பணமில்லாத பண வா்த்தனை திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியது.