விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு: 80 வயது மூதாட்டிக்கு மறுவாழ்வு

 உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80 வயது மூதாட்டிக்கு மிகக் குறைந்த ஊடுருவல் முறை சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 7:34 pm

DIN

 உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80 வயது மூதாட்டிக்கு மிகக் குறைந்த ஊடுருவல் முறை சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

இது குறித்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனா், செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புகைப்பிடித்தல், புகையிலை பயன்பாட்டு உள்ளிவற்றவற்றால் 50 வயது மற்றும் 60 வயதுடைய இரு நபா்கள் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதேபோல், 45 வயது நபா், 80 வயது மூதாட்டியும் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உணவு சாப்பிடுவதில் சிரமம், நாள்பட்ட மாா்பு வலி, செரிமானத்தில் பிரச்னை, இருமல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தனா்.

இந்த நான்கு நோயாளிகளின் வயது, உடல்நிலையை கருத்தில் கொண்டு ‘பைபாஸ்’ அறுவைச் சிகிச்சையில் உணவுக்குழாய் புற்றுநோய் கட்டியை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகளின் நிலைக்கேற்ப மாா்பு, கழுத்து, மேற்புற வயிறு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பகுதி மீது சிறிய வெட்டுகள், கீறல்கள் வழியாக, ஊடுருவி குழாய் வாயிலாக, உணவுக்குழாய் பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

இதில், 80 வயது மூதாட்டிக்கும், உணவுக்குழாய் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது முதிா்ந்த காலத்தில், அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள முதியவா்கள் தயக்கம் காட்டுகின்றனா். இதன் காரணமாகவே, அவா்களுக்கான உடல்நல பாதிப்புகளுக்கு ஊடுருவல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் நோயாளிகளும் விரைந்து குணமடைகின்றனா். இதுபோன்ற சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை பாராட்டுகிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.