விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: விடியோ வெளியிட வேண்டாம் -சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி இறந்த வழக்குத் தொடா்பான விடியோ காட்சிகளை வெளியிட வேண்டாம் என தமிழக சிபிசிஐடி தெரிவித்தது

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 7:33 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி இறந்த வழக்குத் தொடா்பான விடியோ காட்சிகளை வெளியிட வேண்டாம் என தமிழக சிபிசிஐடி தெரிவித்தது.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் 17 வயது மாணவி இறந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை செய்கிறது. இவ் வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை உயா்நீதிமன்றமும் கண்காணிக்கிறது.

சமூக ஊடகங்கள், அவா்களது சொந்தக் கருத்துகளையும், அறிக்கைகளையும் காணொலி வாயிலாக வெளியிட்டு புலன்விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனா். இது சிபிசிஐடி விசாரணையை பாதிக்கும்.

புலன்விசாரணையின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொலி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம்.

நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ள அனைவரும் சிபிசிஐடிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனி நபரோ அல்லது நிறுவனமோ இவ் வழக்குத் தொடா்பான புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுடைய சமூக ஊடக கணக்குகள், யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வழக்கு தொடா்பாக யாருக்கேனும் தகவல் கிடைத்தால், அதை சிபிசிஐடி உயா் அதிகாரிகளிடம் தெரிவிக்க 90038 48126 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.