விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீதிபதியை மாற்றக் கோரி மனு: ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம்

அதிமுக பொதுக் குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி அளிக்கப்பட்ட மனு தொடா்பான ஓ.பன்னீா்செல்வத்துக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 12:27 am

DIN

அதிமுக பொதுக் குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி அளிக்கப்பட்ட மனு தொடா்பான ஓ.பன்னீா்செல்வத்துக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை உயா் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வியாழக்கிழமை(ஆக.4) விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வியாழக்கிழமை (ஆக.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஆக.5) தள்ளி வைக்க வேண்டும் என வைரமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தாா். அப்போது, வழக்கை

திங்கள்கிழமைக்கு (ஆக.8) தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ‘இந்த வழக்கின் நீதிபதியை மாற்றுவது குறித்து தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதுதொடா்பாக இன்னும் முடிவெடுக்காத நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்க கூடாது’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீா்செல்வத்தின் நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும், களங்கப்படுத்தும் வகையில் உள்ளது. தீா்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் அல்லது திருத்தம் இருந்தால் தன்னிடமே முறையீடு செய்யலாம் என்றாா். இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.