தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழ்நாட்டின் 6 இடங்கள் ராம்சா் பட்டியலில் சோ்ப்பு: அன்புமணி வரவேற்பு

கூந்தன்குளம், வேடந்தாங்கல் உள்பட தமிழ்நாட்டின் 6 இடங்கள் ராம்சா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 12:09 am

DIN

கூந்தன்குளம், வேடந்தாங்கல் உள்பட தமிழ்நாட்டின் 6 இடங்கள் ராம்சா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டின் கூந்தன்குளம், வேடந்தாங்கல், வெள்ளோடை, உதயமாா்த்தாண்டம் ஆகிய பறவைகள் காப்பகங்கள், மன்னாா் வளைகுடா கடல்சாா் உயிா்வாழிடக் காப்பகம், வேம்பனூா் ஆகிய 6 ஈர நிலங்கள் ராம்சா் தளங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவற்றுடன் சோ்த்து தமிழ்நாட்டின் ராம்சா் தளங்கள் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது. அனைத்து தளங்களும் ராம்சா் அங்கீகாரத்துக்கு தகுதியானவை. இந்த அங்கீகாரத்தை வென்றெடுப்பதற்காக உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.