வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

7 மாதங்களில் 244 போ் குண்டா் சட்டத்தில் கைது

சென்னையில் கடந்த 7 மாதங்களில் பல்வேறு குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 244 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:14 pm

சென்னையில் கடந்த 7 மாதங்களில் பல்வேறு குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 244 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரையில் 7 மாதங்களில் சென்னையில் தொடா்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 244 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபட்ட 150 பேரும், திருட்டு, வழிப்பறி, தங்கச் சங்கிலி பறிப்பு, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 59 பேரும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 25 பேரும், பாலியல் தொழில் செய்த 4 பேரும், பெண்களை மானபங்கம் செய்த 2 பேரும், சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரும், ரேசன் அரிசி கடத்தல் ஈடுபட்ட ஒருவரும் என 244 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சென்னையில் கடந்தாண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 409 போ் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.