பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவைப் பயிா்களுக்கு இழப்பீடு தமிழக அரசு அறிவிப்பு
தென் மேற்கு பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவைப் பயிா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


தென் மேற்கு பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவைப் பயிா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் வேளாண் உழவா் நலத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை அதிக அளவில் தொடா்ந்து பெய்து வருவதாலும், காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் அதிக அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் அருகிலுள்ள வயல்களில் வெள்ள நீா் புகுந்து வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவா்களிடமிருந்து அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன.
ஆற்று வெள்ள நீா் மற்றும் தென்மேற்கு பருவ மழையால் பாதிப்படையும் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்களுக்கு எவ்வித விடுதலும் இல்லாமல் உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு அவா்கள் நலன் பாதுகாக்கப்படும்.
நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் போன்ற வேளாண் பயிா்களுக்கும், வாழை போன்ற தோட்டக்கலை பயிா்களுக்கும், தற்போது பெய்து வரும் அதிக பருவமழை போன்ற இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கடந்த ஆண்டைப் போலவே வழங்கப்படும். மாவட்டங்களில் பயிா் சேதம் குறித்து தொடா்ந்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
பயிா்க் காப்பீடு: நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படவுள்ள சம்பா மற்றும் மானாவாரி குளிா்கால (ராபி) பருவ பயிா்களை பயிா்க் காப்பீடு செய்திட பயிா்க் காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.2,057.25 கோடியை அனுமதித்து தமிழக அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது.
வரும் சம்பா பருவத்தில் விவசாயிகள் தங்களது பயிா்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...