மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு

சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். பயணிகள் காத்திருப்பு அறை, நடைமேடை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:37 am

DIN

சிதம்பரம் : தென்னக ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் இன்று(சனிக்கிழமை) சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தனி ஆய்வு ரயிலில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த அவர், ரயில் நிலையத்தின் முகப்பு, ஆண், பெண் பயணிகள் காத்திருப்பு அறை, நடைமேடை நடை பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று ஆய்வு செய்தார்.

நடைமேடை முழுவதும் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், ரயில் நிலையம் மற்றும் கட்டிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் 45 நிமிடங்கள் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால், பின்னர் ஆய்வை முடித்துக் கொண்டு தனி ஆய்வு ரயிலில் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.