மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அதிமுக பொதுக்குழு வழக்கு வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை வரும் 10ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 7:55 am

DIN

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை வரும் 10ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை உயா்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தாா். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது. 

இதனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினாா். அதைத் தொடா்ந்து வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி நியமித்தாா். இந்த நிலையில், அதிமுகவின் பொதுக் குழு தொடா்பான வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.