ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் உள்ளன? அறிக்கை அளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள், உள்கட்டமைமப்பு வசதி உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

News image
எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் உள்ளன?
Updated On :8 ஆகஸ்ட் 2022, 8:20 am

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள், உள்கட்டமைமப்பு வசதி உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழக அரசு இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் மற்றும் போதிய உள்கட்டமைப்புகள் வசதி உள்ளது என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு  வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகள் வகுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.