மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருச்சியில் பார்வையற்றவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 9:19 am

DIN

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்ட  பார்வையற்றோர் சங்க கூட்டமைப்புத் தலைவர் சரவணன், பொதுச்செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்டிக் கடை வைத்துக்கொள்ள இட அனுமதி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மானிய கடனுக்கான வயது வரம்பை 45 வயதில் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும், நாகமங்கலம் பார்வையற்றோர் குடியிருப்பில் சேதமடைந்த வீடுகளை தமிழக அரசு புதிதாக கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். 

திடீர் சாலை மறியல்:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த  பார்வையற்றவர்கள் திடீரென்று  சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .

மேலும் போலீசாருக்கும்,  பார்வையற்றவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சென்ற ஏராளமான வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர் அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்தப் போராட்டத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியரக சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.