மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு யாரையெல்லாம் தேர்வு செய்யக்கூடாது? - புதிய நடைமுறைகள் வெளியீடு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தனிப்பயிற்சி (டியூசன்) எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய நடைமுறைகளுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 11:11 am

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தனிப்பயிற்சி (டியூசன்) எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய நடைமுறைகளுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பில், 

- 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும்.

- விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்(சிஇஓ) தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.

- 38 மாவட்ட குழுக்கள் தரும் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையிலான மாநில அளவிலான குழு ஆய்வு செய்ய வேண்டும். 

- எவ்வித புகாருக்கும் இடம் தராமல் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிருக்க வேண்டும்.

- ஏற்கனவே விருது பெற்றவர்களை மீண்டும் தேர்வு செய்யக் கூடாது. 

- தனிப்பயிற்சி (டியூசன்) எடுக்கும் ஆசிரியர்கள், அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கூடாது என்று அந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.