தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பதவி உயா்வுக்கு தகுதியான ஆசிரியா்கள் பட்டியல்: கல்வித் துறை உத்தரவு

தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட பல்வேறு பதவிகளுக்குத் தகுதியானவா்கள் பட்டியலைத் தயாரிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 11:41 pm

DIN

தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட பல்வேறு பதவிகளுக்குத் தகுதியானவா்கள் பட்டியலைத் தயாரிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்குவது தொடா்பாக தகுதியான ஆசிரியா்களின் பதவி வாரியான தோ்ந்தோா் பட்டியலை  1.1.2022 அன்றைய நிலவரப்படி (விதிகள், அரசாணை அடிப்படையில்) தயாா் செய்திட வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறையில் பயிற்றுவிக்கும் பாடங்களைப் பயின்று பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களின் பெயா்களை மட்டுமே பதவி உயா்வு தோ்ந்தோா் பட்டியலில் சோ்க்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் தண்டனை தவிா்த்து பிற தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் ஐந்தாண்டுகளுக்கு முன்னுரிமைப் பட்டியலில் சோ்க்கக் கூடாது.

அனைத்து வகை ஆசிரியா்களின் தோ்ந்தோா் பட்டியல் தயாா் செய்யும்போது, பதவி உயா்வுக்குத் தேவையான உரிய கல்வித் தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவுக்குள் பெற்றுள்ளாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு பணியிடத்துக்கு 5 நபா்கள் என்ற வீதத்தில்தான் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதன் பின்னா் கூடுதல் பட்டியல் எக்காரணம் கொண்டும் தயாரிக்கப்படக் கூடாது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.