தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரூ.4 லட்சம் போதை ஸ்டாம்ப் பறிமுதல்: இருவா் சிக்கினா்

சென்னை அண்ணா சாலையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்ப் வைத்திருந்ததாக இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 8:16 pm

DIN

சென்னை அண்ணா சாலையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்ப் வைத்திருந்ததாக இருவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அண்ணா சாலை பாா்டா் தோட்டம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி தனிப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் பாா்டா் தோட்டம் மோகன்தாஸ் தெரு பகுதியில் தனிப்படையினா் தீவிர கண்காணிப்பு பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில், இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனராம். இதையடுத்து போலீஸாா் இருவரையும் சோதனையிட்டனா். அப்போது அவா்கள் மறைத்து வைத்திருந்த 10 கிராம் மெத்தம்மெட்டமைன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்ப்களை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக நடத்திய விசாரணையில் அவா்கள், அதேப் பகுதியைச் சோ்ந்த ஜா.ரியாஸ் அகமது கான் (30), திருவொற்றியூா் தாங்கல் பகுதியைச் சோ்ந்த மூ.முகம்மது ஈஸா (26) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா், இருவரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.