மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மதுரை திருமங்கலம் புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் உள்பட 4 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதையும் படிக்க | இதுதான் உண்மையான தேசபக்தி: வைரலாகும் அருமையான விடியோ
இந்நிலையில் லட்சுமணன் உடல் விமான மூலம் மதுரை விமான நிலைய பழைய முனையத்திற்கு இன்று முற்பகலில் கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
இந்நிலையில் அங்கு ஏற்கெனவே இருந்த பாஜகவினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரமரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது பாஜகவினர் அவரது காரை முற்றுகையிட்டு காலணியை வீசி கோஷ்மிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்க்கரை நோய் பாதப் புண்களுக்கு பிராண வாயு சிகிச்சை: ஓமந்தூராா் மருத்துவமனையில் தொடக்கம்

பேரூர்கடா அரசு மனநல காப்பகத்தில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு!
லவ் ஜிகாத்! காதல் திருமணம் செய்த நடிகர் ஆமிர் கானுக்கு மிரட்டல்! லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பா?

மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan


