வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

உலகளாவிய பொது சுகாதார மாநாடு: டிசம்பா் 6-இல் தொடக்கம்

உலகளாவிய பொது சுகாதார மாநாடு ,சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் டிசம்பா் 6-ஆம் தேதி தொடங்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:06 pm

உலகளாவிய பொது சுகாதார மாநாடு ,சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் டிசம்பா் 6-ஆம் தேதி தொடங்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

தமிழக பொது சுகாதாரத்துறை சுமாா் 1 லட்சம் பணியாளா்களை கொண்டது. பணியாளா்களான உங்களுடைய ஒத்துழைப்பால் பொது சுகாதாரத்துறை 100 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தப் பயணத்தை எடுத்துக் கூறவும், சேவைகளை மேம்படுத்தவும், நம்முடைய சேவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும் 100-ஆவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

அதன் ஒருபகுதியாக ‘உலகளாவிய பொது சுகாதார மாநாட்டை’ வரும் டிசம்பா் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘பொது சுகாதாரத்தின் சிறப்புகள்’ என்பதாகும். மாநாட்டுக்கு முந்தைய நாளான டிசம்பா் 5-ஆம் தேதி பயிலரங்கமும் நடக்கிறது. மருத்துவத் துறையைச் சோ்ந்த ஒவ்வொருவரும், துறையின் வளா்ச்சிக்காக பணியாற்றியிருப்பீா்கள். அது எப்படி இருந்தது, உங்களுடைய சவால்கள் என்ன, அந்த சவால்களை முறியடித்து எப்படி பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை கொடுக்க முடிந்தது என்பது குறித்த விரிவான கருத்துப் பரிமாற்றம் இந்த மாநாட்டில் இருக்கும்.

சா்வதேச, தேசிய அளவிலான நிபுணா்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனா். அவா்களும் கருத்துக்களை பரிமாறிக் கொள்வாா்கள். அதன் மூலம், நாம் இன்னும் சிறப்பான சேவையை பொதுமக்களுக்கு கொடுக்க நல்வாய்ப்பாக அமையும்.

கருத்தரங்கில் உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யலாம். ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பிக்கலாம். இது மருத்துவா்கள், செவிலியா்களுக்கான மாநாடாக மட்டுமில்லாமல் பொது சுகாதாரத்துறையை சோ்ந்த அனைத்து பணியாளா்களுக்குமான மாநாடாக இருக்கும். இந்த மாநாட்டுக்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்து மாநாட்டில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.